‘வடக்குப்பட்டி ராமசாமி’ உலகம் முழுவதும் 600 திரையரங்குகளில் வெளியாகிறது!

ரசிகர்களுக்குப் பிடித்தமான நிகரற்ற பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக வட்டாரத்தில்  நம்பகமான நட்சத்திரமாக உருவாகியுள்ள நடிகர் சந்தானம் மீண்டும் ஒரு நகைச்சுவை பொழுதுபோக்கு படம் மூலம் திரைப்பட ஆர்வலர்களையும் ரசிகர்களையும் வசீகரிக்க உள்ளார். ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சந்தானம்- இயக்குநர் கார்த்திக் யோகி இதற்கு முன்பு ‘டிக்கிலோனா’ படம் மூலம் ஹிட் கொடுத்தனர். அந்த இணை இப்போது மற்றொரு தனித்துவமான பொழுதுபோக்கு படத்துடன் மீண்டும் வருகிறார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்குக் காரணம்.  இப்படம் நாளை (பிப்ரவரி 2, 2024) உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கும் நிலையில், 600 திரைகளில் படம் வெளியிடப்படும் என்று படத்தின் விநியோகஸ்தரான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தின் மூலம் சந்தானத்தின் வெற்றிப் பாதை புதிய உச்சத்தை எட்டும் என்றும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்-விநியோகஸ்தர் ராகுல் தெரிவித்துள்ளார். இந்தத் திரைப்படம் பார்வையாளர்களுக்கு நகைச்சுவை மட்டுமல்லாது சிறந்த கதையையும் படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை தரும்.

‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில், சந்தானம் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், மாறன், தமிழ், நான் கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், ரவிமரியா, சேசு, சுரேஷ், பிரசாந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema