வடகொரிய அதிபர் கிம் ஜாங் ரஷியா வந்தடைந்தார்

வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சந்தித்து பேசிய பிறகு, வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.

டிரம்ப்-கிம் ஜாங் அன்னின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பிவிடுமோ? என்கிற அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து பேசி தீர்வுகாண 3-வது சந்திப்புக்கு இருநாட்டு தலைவர்களும் பரஸ்பர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னும் ஏப்ரல் 25-ம் தேதி ரஷியாவின் விலாடிவோஸ்ட்டோக் நகரில் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் தனது சிறப்பு ரெயில் மூலம் சுமார் 9 மணிநேரம் பயணித்து (ரஷியா நேரப்படி சுமார் 11 மணியளவில்) விலாடிவோஸ்ட்டோக் நகரை வந்தடைந்தார்.

ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்-னும் நாளை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

முன்னதாக வடகொரியா எல்லையை கடந்து ரஷியாவுக்குள் கிம் ஜாங் அன்-னின் ரெயில் நுழைந்தபோது க்ஹஸான் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘இந்த பயணம் பயனுள்ளதாகவும், வெற்றிகரமாகவும் அமையும் என்று நான் நம்புகிறேன். கொரியா தீபகற்பத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் ரஷியா-வடகொரியா இடையிலான பல்வேறு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக புதினுடன் நான் விரிவாக ஆலோசனை நடத்துவேன்’ என குறிப்பிட்டார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools