வசந்த பஞ்சமி – பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் மக்களுக்கு வாழ்த்து
தமிழகத்தைப் பொறுத்தவரையில் சரத் நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரியின் ஒன்பதாவது நாளான நவமியன்று சரஸ்வதி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வடமாநிலங்களில் மாக மாதத்தில் (ஜனவரி – பிப்ரவரி) வருகின்ற சுக்ல பட்ச (வளர்பிறை) பஞ்சமி திதி பசந்த் (வசந்த) பஞ்சமி என்ற பெயரில் சரஸ்வதி தேவிக்குரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி வழிபாடு நடைபெற்றதாக வேதங்களிலும் புராணங்களிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த நாளில்தான் வட மாநிலத்தவர் சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர்.
இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வசந்த பஞ்சமிக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதேபோல், பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில், இந்த நன்னாளில் கல்வி கடவுளான சரஸ்வதி தேவியின் அருள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.