X

வங்காளதேசம் அருகே கரையை கடந்த மிதிலி புயல்

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக வலுப்பெற்றது. கடந்த 14-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக புயலாக வலுப்பெற்று, வங்காளதேசத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலம் பாராதீப்பில் இருந்து 200 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்த மிதிலி புயல், சுமார் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று பிற்பகலில் கரையை கடக்கத் தொடங்கிய மிதிலி புயல், 20 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்காளதேசம் அருகே இரவுக்குள் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அப்போது பலத்த காற்று வீசியதுடன் கடலோர பகுதிகளில் கனமழை பெய்தது. இந்தப் புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து திரிபுரா மற்றும் வங்காளதேசம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.

Tags: tamil news