வங்கதேச அணிக்கு பீல்டிங் செட் செய்த டோனி!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், இந்திய அணி நேற்று பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் அபாரமாக விளையடிய இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில், பேட்டிங்கில் டோனி, மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் ஜொலித்தனர். இருவரும் சதம் அடித்து இந்திய அணி இமாலய ரன்களை சேர்க்க உதவினர்.

முன்னதாக, இந்திய அணி பேட் செய்து கொண்டிருந்த போது, 39 ஓவரை சபீர் ரஹ்மான் வீசினார். அப்போது, டோனி பேட்டிங் செய்தார். திடீரென பேட்டிங் செய்வதை நிறுத்திய டோனி, ஆட்ட விதிகளுக்கு மாறாக பீல்டரை நிறுத்தி இருகிறார்கள், பீல்டர்களை மாற்றுங்கள் என்று பந்துவீச்சாளர்களிடம் கூறினார். ஏனென்றால் நோபாலாகச் சென்றுவிடும் என்று அறிவுறுத்திய டோனி அதை மாற்றும்படி கூறினார்.

இதைக் கேட்ட சபீர் ரஹ்மான், உடனடியாக பீல்டரை, ஸ்கொயர் லெக்கிற்கு மாற்றினார். தான் பேட்டிங் செய்தபோதிலும் கூட, எதிரணியினர் பீல்டர்களை சரியாக நிறுத்தாமல் இருந்தபோது அவர்களுக்கு உதவிய டோனியின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news