Tamilசெய்திகள்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

நாளை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக அறிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

வடக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடையும். 5 நாள் கனமழை பெய்யும் என்பதால் கேரளா, கர்நாடகாவிற்கு ஆரஞ்சு, குஜராத், மகாராஷ்டிராவுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு மத்திய மேற்கு, அரபிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *