ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கூலி என்று பெயரிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், மாஸ்டர் மகேந்திரன் நடிக்கின்றனர். மற்ற நடிகர்களை குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ஒரு பான் இந்தியன் திரைப்படத்தை இயக்கப்போவதாகவும் அதில் நடிகர் அமீர்கான் கதாநாயகனாக நடிக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கப்போகும் படங்களுக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது.