லெபனான் வெடி விபத்து எதிரொலி – அறிவிப்பு வெளியிட்ட சுங்கத்துறை

சென்னையில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் பாதுகாப்பாக உள்ளது என்று சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லெபனான் நாட்டில் அமோனியம் நைட்ரேட் வெடித்து விபத்து ஏற்பட்டதால், சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் இந்த விளக்கத்தை அளித்துள்ளனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் மேலும் கூறுகையில்,

“ 6 ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் மணலி சுங்கத்துறை கிடங்கில் பாதுகாப்பாக உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் மின்னணு முறையில் ஏலம் விடப்படும். மணலி சுங்கத்துறை கிடங்கை சுற்றி வீடுகள் எதுவும் இல்லை” என்று தெரிவித்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools