லெபனான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை பாலஸ்தீன காசா பகுதி பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக கூறி உடனடியாக இஸ்ரேல் போர் தொடுத்திருக்கிறது. போர், ஐந்தாம் நாளான இன்றும் தீவிரமாக தொடர்கிறது.
இந்நிலையில், இஸ்ரேல் படைகளால் தெற்கு லெபனான் நகரங்கள் மீது குறிவைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலின் வடக்கு பகுதியானது லெபனானில் இருந்து தாக்கப்பட்ட நிலையில், எதிர்த் தாக்குதல் நடந்து வருகிறது. மேலும், லெபனானில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா பொறுப்பேற்றுள்ளது.
இதற்கிடையே, தெற்கு லெபனானுக்கு செல்ல வேண்டாம் என நெதர்லாந்து அறிவிறுத்தியுள்ளது.