X

‘லியோ’ படப்பிடிப்பு நிறைவடைந்தது – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘லியோ’ படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் தனக்கான காட்சிகளை நடிகர் விஜய் நிறைவு செய்தார்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 மாதமாக நடைபெற்று வந்த ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இது தொடர்பான புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

Tags: tamil cinema