Tamilசினிமா

’லியோ’ படத்திற்கு 13 இடங்களில் கட் கொடுத்த தணிக்கை குழுவினர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.

அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் புகை மற்றும் போதைப்பொருட்கள், ரத்தம் தெறிக்கும், ஆபாச வார்த்தைகள் என 13 கட்டுகள் போட்டிருப்பதாக சென்சார் போர்டு அறிவித்துள்ளது.