Tamilவிளையாட்டு

லா லிகா கால்பந்து போட்டி – கெடாபி அணியை வீழ்த்தி பார்சிலோனா வெற்றி

ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து லீக்கான லா லிகாவில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் கெடாபி சிஎஃப் – எஃப்சி பார்சிலோனா அணிகள் மோதின.

ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் பார்சிலோனா நட்சத்திர வீரர் மெஸ்சி முதல் கோலை பதில் செய்தார். 39-வது நிமிடத்தில் மற்றொரு வீரரான சுவாரஸ் ஒரு கோல் அடித்தார். 43-வது நிமிடத்தில் கெடாபி அணியின் மேட்டா கோல் அடிக்க பார்சிலோனா முதல் பாதி நேர ஆட்டத்தில் 2-1 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் பார்சிலோனா 2-1 என வெற்றி பெற்றது.

அதேவேளையில் அட்லெடிகோ டி மாட்ரிட் – செவியா எஃப்சி இடையிலான ஆட்டம் 1-1 டிராவில் முடிந்தது. இதனால் பார்சிலோனா 18 ஆட்டத்தில் 12 வெற்றி, 4 டிரா, 2 தோல்வி மூலம் 40 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. அட்லெடிகோ டி மாட்ரிட் 18 ஆட்டங்களில் 9 வெற்றி, 8 டிரா, ஒரு தோல்வியின் மூலம் 35 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. செவியா எஃப்சி 33 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் 30 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *