மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலை கடந்த சில தினங்களுக்கு முன் கைகளை இழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் வாசிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதை பார்த்த இசையமைப்பாளர் அனிருத்தும் அவரை வாழ்த்தி இருந்தார்.
இதனிடையே லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், “அந்த இளைஞர் பெயர் தான்சேன். தனது மாற்றுத்திறனாளிகள் குழுவில் இருப்பவர். இந்த லாக்டவுன் சமயத்தில் 3 நாட்கள் பயிற்சி செய்து ‘மாஸ்டர்’ படத்தின் ஒரு பாடலை வாசித்திருக்கிறார். இவரது கனவே அனிருத் அவர்களின் இசையில் ஒரு சிறு பகுதி வாசிக்க வேண்டும் என்பதும், விஜய் அவர்கள் முன்னிலையில் இதை வாசிக்க வேண்டும் என்பதுதான்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், லாரன்ஸின் வேண்டுகோளுக்கு இணங்க விஜய்யும், அனிருத்தும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவித்து லாரன்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: நேற்றிரவு நண்பன் விஜயிடம் பேசினேன். லாக்டவுன் முடிந்ததும் அந்த இளைஞரை அழைத்து வந்து தன் முன்னால் வாசித்துக் காட்ட சொன்னார்.
அதே போல அனிருத்தும் அந்த இளைஞருடைய விருப்பத்திற்கேற்ப தன்னுடைய இசையில் அவரை வாசிக்க வைப்பதாக கூறியுள்ளார். அந்த இளைஞரின் கனவை நனவாக்கிய நண்பன் விஜய்க்கும் அனிருத்துக்கும் என்னுடைய மிகப்பெரிய நன்றி” என தெரிவித்துள்ளார்.