லாபஸ்சாக்னே ஒருநாள் போட்டியிலும் சாதிப்பார் – ஆரோன் பிஞ்ச் நம்பிக்கை
ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மார்னஸ் லாபஸ்சாக்னே. இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஸ்மித்திற்கு காயம் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
அதை சரியாக பயன்படுத்தி டெஸ்ட் போட்டியில் நிரந்த இடத்தை பிடித்தார். கடைசி ஐந்து டெஸ்டில் நான்கு சதங்கள் விளாசினார். இதனால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3-வது இடத்திற்கு உயர்ந்தார்.
ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அந்த அணியில் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், அலெக்ஸ் கேரி, ஆஷ்டோன் டர்னர், ஸ்மித், டி’ஆர்கி ஷார்ட் ஆகியோர் இருந்ததால் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறவில்லை. சீன் அப்போட் காயம் அடைந்ததால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்
டெஸ்ட் போட்டியில் அசத்திய லாபஸ்சாக்னேவால் ஒருநாள் போட்டியிலும் சிறப்பாக விளையாட முடியும் என் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
லாபஸ்சாக்கே குறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘ஆஷஸ் தொடரின் தொடக்கத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்ட பின், அணிக்கு திரும்பினார். அதன்பின் நம்ப முடியாத வகையில் விளையாடினார். ஆகவே, அவரால் தொடர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
டெஸ்ட் போட்டியின் ஃபார்ம் லிஸ்ட் ஏ போட்டியிலும் தொடர்ந்தது என்பதை உள்ளூர் தொடரில் காண்பித்துள்ளார். 3-வது இடத்தில் களம் இறங்கி விளையாடும் அவர், சராசரி 40 வைத்துள்ளார். உள்ளூர் தொடரில் பாரம்பரியமாக பேட்டிங் செய்ய கஷ்டமாக இருக்கும் இடத்தில் குயின்ஸ்லாந்து அணிக்காக கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.
அதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்றவாறு அவரால் மாறமுடியாது என்று என்னால் பார்க்க முடியவில்லை’’ என்றார்.