X

லண்டனில் நடைபெறும் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணி

மணிரத்னம் இயக்கத்தில் தயாரான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்துக்கான தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தை எட்டி உள்ளது, ‘பொன்னியின் செல்வன் 2’ அடுத்த மாதம் (ஏப்ரல்) 28-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

முதல் பாகம் போன்று இரண்டாம் பாகத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர். இப்படத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியான நிலையில், இப்படத்தின் பின்னணி இசை பணிகள் லண்டனில் உள்ள ஸ்டுடியோவில் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்து மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரகுமானின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.