Tamilசினிமா

லஞ்சம் வாங்கிக்கொண்டு என் மீது போலீஸ் வழக்கு! – மீரா மிதுன் புகார்

சென்னை நட்சத்திர விடுதியில் நடிகை மீரா மிதுன் நிரூபர்களிடம் பேசியதாவது:-

40 நாட்கள் நான் இங்கு இல்லை அதனால் இந்த செய்தியாளர் சந்திப்பு , என்னை குறித்த பல்வேறு தகவல்கள் வலைதளங்களில் உலா வருகின்றன , காவல் துறை நடவடிக்கைகள் எடுத்திருந்தால் நான் வேறு மாநிலத்திற்கு சென்று இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது, இங்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் இதை விட பெரிய இடத்திற்கு சென்றால் கிடைக்கும் என்றால் செல்வேன்.

ஆனால் அப்படி சென்றால் தமிழகத்திற்கு அசிங்கம், எனக்கு இதனால் அசிங்கமட்டுமல்ல மிரட்டல்களும் வருகின்றன, என் மேல் இரண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது இரண்டுமே பொய்யானவை, என்னிடம் எந்த விசாரணையும் செய்யால் பதிவு செய்தார்கள், லஞ்சம் வாங்கி கொண்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள்.

நானும் பணம் கொடுத்தால் அதையும் வாங்கிக்கொண்டு வழக்கு பதிவு செய்வார்கள் போல, இதற்கு காரணமானவர்கள். ஆய்வாளர்கள் சிலர் மற்றும் விஜய் டிவி, நிகழ்ச்சி முடியும் வரை என்னை பயன்படுத்திக்கொண்டு இப்போது எனக்கு முறையாக பதில் அளிக்கவில்லை, எனக்கு வரவேண்டியது முழுமையாக வரவில்லை. சேரன் விவகாரத்தில் நான்இந்த நிகழ்ச்சியை குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கலாம் அப்படி அளித்து நிகழ்ச்சியை நிறுத்தினால் தான் எனக்கு கிடைக்கவேண்டியது கிடைக்கும் என நினைக்கிறேன், நிகழ்ச்சியை முறையாக நடத்திய போதும் எனக்கு கொடுக்கப்பட்ட வேண்டியவை கொடுக்கப்படவில்லை.

விஜய் டிவி தலைமையில் இருப்பவர் என்னிடம் கெஞ்சினார் அதற்காக தான் குறைவான தொகையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். என்னிடம் முறையாக குறிப்பிட்ட காலத்தில் தருகிறேன் என கூறலாம் எதையும் கூறவில்லை. எனக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை.

அட்வான்ஸ் கூட வாங்காமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் மொத்தம் 35 நாட்கள் இருந்தேன் இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் யாரிடமும் உறவாடவில்லை பழகவும் இல்லை என் எண்ணம் யாரிடமும் இல்லை, சரவணன் நல்ல நபர் அவரிடம் மட்டும் பேசியுள்ளேன். எனக்கு ஒரு கால் செய்து கால அவகாசம் கூறியிருந்தால் கூட போதும், உயிருக்கு பயந்து நான் மும்பையில் இருந்தேன் மும்பை, கேரளா , கர்நாடக போலீசார் சிறப்பாக பணியாற்றுகின்றனர் பாதுகாப்பாக உள்ளது. மும்பையில் குடியேறிவிட்டேன்.

எனக்கு தெரிந்து தமிழில் சரியாக காட்டினார்களா எனக்கு தெரிவில்லை நான் பார்க்கவில்லை, ஆனால் சிலர் என்னை புரிந்து கொண்டார்கள். நான் அரசியலுக்கு வரவுள்ளேன், என்னை போல பிரபலங்களுக்கு இந்நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலை ஏற்படும்?

அ.தி.மு.க-வில் ஜெயலலிதா இருந்த வரை சிறப்பாக இருந்தது. இப்போது ஆண் ஆதிக்கம் அதிகமாக உள்ளது பெண்கள் அமைச்சர் பதவிக்கு வரவேண்டும், கமலை சந்தித்து கோரிக்கை வைத்தீர்களா? என்ற கேள்விக்கு கமலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை புரோடக்‌‌ஷன் குழுவில் தான் பேசினேன், கமல் குறித்து பேசியதால் தான் பணம் கொடுக்கவில்லை என்று கூறமுடியாது.

எதிராக செயல்பட்ட அதிகாரிகள் அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள், இதன் பின்னரும் எனக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் விஜய்டிவி சேனல் முழுவதும் பிரச்சனையை சந்திக்க நேரிடும். நான் வாங்கிய பட்டங்கள் பொய்யானவை என்றால் என்னால் பயிற்சி பெற்று பட்டம் பெற்றவர்களிடமும் திரும்ப பெறுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *