டெல்லியில் 3 போக்குவரத்து காவலர்கள் லஞ்சப் பணத்தை பிரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில், ஒரு போக்குவரத்து காவலர் தனக்கு பின்னால் ஒரு மேசையில் லஞ்ச பணத்தை வைக்குமாறு சைகை காட்டுகிறார். பின்பு மேசையில் வைக்கப்பட்ட பணத்தை 3 காவலர்களின் முகமும் அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
வீடியோ வைரலானதை அடுத்து, 2 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர்கள் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.