லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட சுரேஷ் ரெய்னா முடிவு

லங்கா பிரீமியர் லீக் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதற்கான ஏலப்பட்டியலில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

ஜூன் 14-ம் தேதி கொழும்பில் ஏலம் நடைபெற உள்ளது. போட்டிகள் ஜூலை 31-ந் தேதி தொடங்குகிறது. ரெய்னா, ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு பெயர் பெற்ற ஒரு சிறந்த டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன். ஐபிஎல் தொடக்க சீசனில் இருந்து ஒரு சிறந்த வீரராக ஜொலித்தவர். அவர் ஐபிஎல்லில் 205 போட்டிகளில் விளையாடி 5,500 ரன்களை குவித்துள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ரெய்னா, ஐபிஎல்லில் சிஎஸ்கே மற்றும் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடினார். மேலும் உள்நாட்டு போட்டிகளில் உத்தரபிரதேசம் அணிக்காக விளையாடியுள்ளார். இவர் கடந்த ஆண்டு அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.

பிசிசிஐயின் விதிகளின்படி, இந்திய வீரர் மற்ற நாடுகளில் உள்ள லீக்குகளில் விளையாட அனைத்து வகையான உள்நாட்டு போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிக்க வேண்டும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports