X

லக்சயா சென்னுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென், டென்மார்க்கின் விக்டர் விக்டர் ஆக்சல்சென்னை
எதிர்கொண்டார். இதில் 21-10, 21-15 என்ற செட் கணக்கில் விக்டர் ஆக்சல்சென் வெற்றி பெற்று பட்டத்தைக் கைப்பற்றினார்.

இதில் இந்திய பேட்மிண்டன் வீரர் லக்சயா சென்னுக்கு 2வது இடம் கிடைத்தது.

இந்நிலையில், லக்சயா சென்னுக்கு பாராட்டு தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு மிக அருகில் வந்து தவறவிட்டுள்ளார். வருங்காலத்தில் சிறப்பான வெற்றிகளைக் குவித்திட வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
—————–