ரோகித் சர்மா, கோலி இல்லை என்றாலும் வெற்றிபெறும் பேட்டிங் நம்மிடம் உள்ளது – சச்சின் நம்பிக்கை

india-can-win-in-australia-sachin

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா விளையாடவில்லை. இந்த டெஸ்ட் முடிந்த பின்னர், விராட் கோலி இந்தியா திரும்புகிறார். ரோகித் சர்மா 2-வது டெஸ்டில் விளையாடும் வாய்ப்பு இல்லை.

இதனால் மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்டில் இருவரும் இல்லாமல் இந்தியா களம் இறங்குகிறது. என்றாலும், இந்தியாவால் வெற்றி பெறக்கூடிய அளவிற்கு பேட்டிங் உள்ளது என்று சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘நம்முடைய பேட்டிங் போதுமான அளவிற்கு வலிமை படைத்தது. ரோகித் சர்மா இல்லாமல் நியூசிலாந்தை எதிர்கொண்டோம். எதற்கும் உத்தரவாதம் கிடையாது. சில நேரங்களில் வீர்கள் காயம் அடையலாம். இதனால் போட்டியில் இருந்து அல்லது ஒட்டுமொத்த தொடரில் இருந்து வெளியேறலாம். தனிப்பட்ட நபர் யாராக இருந்தாலும், அவர்கள் இல்லாமல் விளையாட தயார் செய்து கொள்ள வேண்டும். இறுதியில் இது ஒரு அணியை பற்றியது. தனிப்பட்ட நபர் பற்றியது கிடையாது’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools