Tamilவிளையாட்டு

ரோகித், கோலி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விளையாடலாம் – பயிற்சியாளர் கவுதம் காம்பீர் பேட்டி

இந்தியா இலங்கை அணிகள் மோதும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்க இருக்கிறது. இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் செயல்பட உள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று அவர் வழிநடத்த இருக்கும் முதல் தொடரை ஒட்டி, கவுதம் காம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார்.

தலைமை பயிற்சியாளர் காம்பீர், மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் செய்தியாளர்களை சந்தித்தனர். பயிற்சியாளராக பொறுப்பேற்றபின் காம்பீர் பங்கேற்கும் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவே.

“நான் மிகவும் வெற்றிபெற்ற அணியை வழி நடத்துகிறேன். டி20 உலக கோப்பை சாம்பியன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போன்ற தொடர்களில் இரண்டாம் இடம் பிடித்தது மகிழ்ச்சி. ஆனால் இன்னும் பல வெற்றிகளை நாம் காண வேண்டும்.

விளையாட்டு வீரர்களுக்கு சுதந்திரம் என்பது மிகவும் முக்கியம் என்பதை நான் நம்புகிறேன். எனக்கும், வீரர்ளுக்கும் நல்ல நம்பிக்கையை வளர்த்துக் கொள்வேன். அவர்களுக்கு பின்னால் உறுதுணையாக எப்போதும் இருப்பேன்.

“ரோகித் மற்றும் விராட் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் அவர்களின் முழு திறமையை காண்பித்து உள்ளனர். டி20 ஆகட்டும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியாகட்டும், அவர்களுக்குள் இன்னும் நிறய கிரிக்கெட் மீதம் இருக்கிறது.

அவர்கள் நினைத்தால் 2027 உலக கோப்பையிலும் விளையாடும் சக்தி இருக்கிறது. ஆனால் அவர்கள் விளையாடுவதும் விளையாடாமல் இருப்பதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் ஆகும். அவர்கள் நிச்சயம் உலக தரமிக்க வீரர்கள். எந்த வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அவர்கள் எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் விளையாடலாம்,” என்று கூறியுள்ளார்.