Tamilவிளையாட்டு

ரொனால்டோவின் ஓட்டல் மருத்துவமனையாகவில்லை – நிர்வாகம் விளக்கம்

கொரோனா வைரஸ் இத்தாலியில் ருத்ர தாண்டம் ஆடி வருகிறது. நாளுக்குநாள் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உயிர் இழப்போரின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருகிறது.

இத்தாலி நாட்டின் முதன்மை கால்பந்து தொடரான ‘செரி ஏ’ அணியில் விளையாடும் அணிகளில் ஒன்று யுவென்டஸ். இந்த அணியில் உள்ள ஒரு வீரருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தது. இதனால் அந்த அணியில் உள்ள 121 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உலகின் தலைசிறந்த வீரரான போர்ச்சுக்கலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவும் யுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதனால் அவர் சொந்த ஊரான மடேய்ராவில் ரொனால்டோ தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு லிஸ்பனில் நட்சத்திர ஓட்டல் உள்ளன. இந்த ஓட்டலை ரொனால்டோ கொரோனா வைரஸ் சிகிச்சை மருத்துவமனையாக மாற்றிவிட்டார் என்ற செய்தி வெளியானது.

இதை ஓட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது. ஓட்டல் நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில் ‘‘நாங்கள் ஒட்டல்தான். மருத்துவமனையாக மாற்றவில்லை. இனிமேலும் ஓட்டலாகத்தான் இருக்கும். பத்திரிகைகளில் இருந்து போன் வந்த வண்ணமே உள்ளன. சிறந்த நாளாக அமைய வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

போர்ச்சுகலில் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *