Tamilசினிமா

ரெண்டு பெரிய ஹீரோக்கள் ஒன்றாக நடித்த படங்கள் வந்து ரொம்ப நாளாச்சு – ஜூனியர் என்.டி.ஆர்

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ஜூனியர் என்.டி.ஆர். பேசும் போது, இரண்டு பெரிய ஹீரோக்கள் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு… முன்பு ரஜினி, கமல் படங்கள் பார்த்த அதே உணர்வு தற்போது எழுந்துள்ளது. இரண்டு பெரிய ஹீரோக்களை வைத்து அப்போ கே.பாலசந்தர் செய்தார். தற்போது ராஜமவுலி செய்து இருக்கிறார்.

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் தியேட்டரில் வந்து பாருங்கள் என்றார்.