ரூ.7,500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘அவதார் 2’!

டைட்டானிக் படம் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்த படம் ‘அவதார்’. இந்த படம் உலக அளவில் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தின. இதற்கு 3 ஆஸ்கார் விருதுகளும் கிடைத்தன.

அடுத்தடுத்து இந்த படத்தின் 4 பாகங்கள் தயாராகும் என்று அறிவித்தனர். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 2-ம் பாகம் மற்றும் 3-ம் பாகத்துக்கான படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்து வந்தன. வருகிற டிசம்பர் மாதம் 2-ம் பாகம் திரைக்கு வரும் என்று அறிவித்து, பின்னர் தேதியை 2021 டிசம்பர் 17-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதுபோல் அவதார் 3-ம் பாகம் 2023-ம் ஆண்டு டிசம்பர் 22-ந்தேதியும், அவதார் 4-ம் பாகம் 2025 டிசம்பர் 19-ந்தேதியும், அவதார் 5-ம் பாகம் 2027 டிசம்பர் 17-ந்தேதியும் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இந்த 4 பாகங்களுக்கான மொத்த பட்ஜெட் ரூ.7500 கோடி என்று தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

நியூசிலாந்தில் அவதார் படத்துக்கான அரங்குகள் அமைத்து ஜேம்ஸ் கேமரூன் படப்பிடிப்பை நடத்தும் புகைப்படங்களையும் பட நிறுவனம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளது. தண்ணீருக்குள் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools