வாழைப்பழ விளைச்சலில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த நிதியாண்டில் (2020-2021) ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான 11 மாதங்களில் இந்தியா 1 லட்சத்து 91 ஆயிரம் டன் வாழைப்பழத்தை ஏற்றுமதி செய்துள்ளது. அதன் மதிப்பு ரூ.619 கோடி ஆகும்.
உலகத்தரம் வாய்ந்த விவசாய முறைகளை பின்பற்றியதுதான் வாழைப்பழம் ஏற்றுமதி அதிகரிக்க காரணம் என்று மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மராட்டிய மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தை சேர்ந்த ஜல்கோன் மாம்பழம் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. 22 மெட்ரின் டன் எடையுள்ள இப்பழம் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.