X

ரூ.3 லட்சம் மதிப்புள்ள கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை பிரியங்கா சோப்ரா

தமிழ் திரையுலகில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘தமிழன்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் பல்வேறு வித்தியாசமான கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து அங்கு முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

பிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக்ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார். இந்தி, ஹாலிவுட் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சர்ச்சையில் சிக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

சமீபத்தில் புகை பிடிக்கும் படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நீங்கள் இப்படி புகைப்பிடிக்கலாமா? என்று ரசிகர்கள் விளாசினார்கள்.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா, தனது 37வது பிறந்தநாளை மியாமியில் தனது கணவருடன் கோலாகலமாக கொண்டாடினார். அவர் கணவருடன் கேக் வெட்டி மகிழ்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அவரது கணவர் நிக், பிறந்தநாளுக்கு வழங்கிய கேக்கின் விலை ரூ.3.5 லட்சம் என தகவல் வெளியாகியுள்ளது. 5 அடுக்குகள் கொண்ட அந்த கேக்கில் சிவப்பு நிற பிரத்யேக கிரீமும், மேலே தங்க துகள்கள் தூவப்பட்டும் இருந்தது.