ரூ.3 கோடி மதிப்பிலான கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஊர்வசி ரவுத்தேலா

தங்க முலாம் பூசப்பட்ட ₹3 கோடி மதிப்புள்ள கேக்கை வெட்டி தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 24 காரட் தங்கமுலாம் பூசப்பட்ட கேக்கை பிரபல பாடகர் யோ யோ ஹனிசிங் பரிசாக கொடுத்துள்ளார்.

தற்போது பாடகர் யோ யோ ஹனி சிங்குடன் இணைந்து ‘செகண்ட் டோஸ்’ என்கிற மியூசிக் ஆல்பத்தில் பணியாற்றி வரும் ஊர்வசி ரவுடேலாவுக்கு தங்க கேக்கை அவர் பரிசளித்துள்ளார். இதற்காக யோ யோ ஹனி சிங்கிற்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஊர்வசி பதிவிட்டுள்ளார்.

“என்னைப் பொறுத்தவரை, ஊர்வசி ரவுடேலா உண்மையிலேயே உலகின் மிக அழகான பெண், நான் அதை பல முறை கூறியிருக்கிறேன். அவள் மிகவும் அழகான பெண், அதனால்தான், நான் 3 கோடி மதிப்பிலான இந்த கேக்கை அவளுக்காக வாங்க முடிவு செய்தேன் என்று யோ யோ ஹனி சிங் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools