ரூ.22 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தீபிகா படுகோனே

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில், தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் தம்பதி மும்பையில் உள்ள அலிபாக் பகுதியில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கி உள்ளனர். இதன் மதிப்பு ரூ.22 கோடியாம்.

கடற்கரை பகுதியில் இந்த இடம் அமைந்துள்ளதால், பல தொழிலதிபர்களும், திரை நட்சத்திரங்களும் இந்தப் பகுதியில் சொத்துக்களை வாங்கி வருகின்றனர். நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் சிங்கும் தற்போது மும்பையில் உள்ள பிரபாதேவி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இது தவிர இவர்களுக்கு மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் சொத்துக்கள் உள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools