ரூ.2.55 கோடி விளையாட்டு உதவித்தொகை, கார் பரிசு! – வேலம்மாள் நெக்சஸ் பள்ளியின் புரட்சிகரமான நடவடிக்கை

வேலம்மாள் பள்ளியின் மாணவர்கள் படிப்பில் மட்டும் இன்றி விளையாட்டு, கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னிலை வகித்து வருவதோடு, பல்வேறு சாதனைகள் புரிந்து வருகிறார்கள். மாணவர்கள் இத்தகைய சாதனை செயல்களில் ஈடுபடுவதற்காக அவர்களை பல்வேறு வகையில் ஊக்குவித்து வரும் வேலம்மாள் நெக்சஸ் பள்ளி, மாணவர்களுக்கு பல சலுகைகளையும், உதவிகளையும் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 416 வேலம்மாள் நெக்சஸ் மற்றும் விளையாட்டு வீரர்களை பாராட்டும் நிகழ்ச்சியை வேலம்மாள் நெக்சஸ் இன்று, சென்னை, வேலம்மால் அரங்கில் பிரமாண்டமான முறையில் நடத்தியது.

விளையாட்டுத் துறையில் மாணவர்களின் பங்களிப்பை கொண்டாடும் விதமாகவும், வேலம்மாளின் விளையாட்டு முன்னேற்றக் கொள்கைகளை வலியுறுத்தும் விதமாகவும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துளசி மதி, பாரா பேட்மின்டன் வீரர் (அர்ஜுனா விருதுபெற்றவர்), மணிஷா ராமதாஸ், பாரா பேட்மின்டன் வீரர் (அர்ஜுனா விருதுபெற்றவர்), நித்யா ஸ்ரீ சிவன், பாரா பேட்மின்டன் வீரர் (அர்ஜுனா விருதுபெற்றவர்), அபய் சிங், இந்திய ஸ்குவாஷ் வீரர் (அர்ஜுனா விருதுபெற்றவர்), கிருபாகரராஜா, செயலாளர், தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக வேலம்மாள் மெட்ரிக் பள்ளியின் மாணவரும், சர்வதேச பேட்மிண்டன் வீரருமான ரெதின் பிரணவ் பங்கேற்று பாராட்டப்பட்டார். அவரது சாதனைகள் மற்றும் அர்ப்பணிப்பு, இளம் விளையாட்டு ஆர்வலர்களுக்கு மிகுந்த உத்வேகமாக அமைந்தது.

வேலம்மாள் நெக்சஸ் 2025-26 கல்வியாண்டுக்காக ரூ.2.55 கோடி மதிப்புள்ள விளையாட்டு உதவித்தொகைகளை அறிவித்தது. மேலும், தமிழ்நாட்டை தேசிய விளையாட்டுகளில் பிரதிநிதித்துவம் செய்வதற்காக ரூ.30 லட்சம் மதிப்புள்ள விமான பயண செலவுகளுக்கான நிதியுதவியையும் வழங்கியுள்ளது.

வேலம்மாள் நெக்சஸ் தங்கள் சிறந்த ஐந்து உடற்தகுதி ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கார்களை பரிசாக வழங்கியது. இந்த புரட்சிகரமான நடவடிக்கை, விளையாட்டு திறமைகளை வளர்ப்பதில் அவர்கள் செய்த அர்ப்பணிப்பு முயற்சிகளை அங்கீகரிக்கிறது.

மேலும், வேலம்மாள் நெக்சஸ், அர்ஜுனா விருதுபெற்ற ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ரூ.3 லட்சம் மதிப்புடைய காசோலை வழங்கி அவர்களை சிறப்பாக பாராட்டியது.

விழாவில், வேலம்மாள் நெக்சஸ் தொடர்பாளர் (கார்ஸ்பாண்டெண்ட்) திரு. எம்.வி.எம்.வேல்மோகன் கலந்து கொண்டு, அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி, அவர்களின் எதிர்கால வெற்றிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools