Tamilசினிமா

ரூ.100 கோடி வசூல் செய்த ‘வலிமை’ – நடிகை ஹூமா குரேஷி பதிவால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி

அஜித் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கிய இப்படத்தை போனி கபூர் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார். இப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி உலகமுழுவதும் வெளியானது. பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது இப்படத்தின் வசூலை பற்றி ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் அப்படத்தில் நடித்த நடிகை ஹூமா குரேஷி வலிமை படத்தின் வசூல் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதன்படி வலிமை மொத்தமாக 100 கோடி வசூலை அள்ளியதாக இவர் பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவு அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.