ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த ஷாருக்கானின் 10 வது படம் ‘டங்கி’!
ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘டங்கி’. இந்த படத்தில் ஷாருக்கான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பொமன் இரானி, கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேக கதாபாத்திரங்களுடன் நடித்துள்ளனர்.
ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுதி இருக்கிறார்கள். ‘டங்கி’ திரைப்படம் டிசம்பர் 21-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி குறிப்பிடத்தக்க வகையில் அதன் முத்திரையைப் பதித்துள்ளது.
‘டங்கி’ திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்து, பாக்ஸ் ஆபிஸில் தனது இருப்பிடத்தை உறுதி செய்தது. தற்போது இந்த திரைப்படம் 250 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. ‘பதான்’ மற்றும் ‘ஜவான்’ ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு இந்த ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘டங்கி’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்த மூன்றாவது திரைப்படமாகும்.
இத்திரைப்படம் சுமார் 29.25 கோடி ரூபாய் முதல் 30.25 கோடி ரூபாய் வரை வசூலித்து, ஞாயிற்றுக்கிழமையன்று அதன் மொத்த வசூல் 102.50 கோடி ரூபாயாக இருந்தது. இதன் மூலம் நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த ஷாருக்கானின் பத்தாவது படமாக ‘டங்கி’ இடம்பெற்றது. இந்த திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இத்திரைப்படம் 250 கோடி ரூபாயை எட்டி, 250 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருக்கிறது.