X

ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக வீர சாவர்க்கர் உருவங்களைப் பொறிக்க வேண்டும் – மகாசபா கோரிக்கை

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்து மகாசபா முன்னாள் தலைவருமான வீர சாவர்க்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள இந்து மகாசபா அலுவலகத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து, மத்திய அரசுக்கு இந்து மகாசபா சார்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தில் கூறியதாவது:

ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக வீர சாவர்க்கர் மற்றும் இதர சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்களைப் பொறிக்க வேண்டும்.

மேலும், பாராளுமன்ற கட்டிடத்துக்குச் செல்லும் சாலைக்கு வீர சாவர்க்கர் பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.