கிரிக்கெட் உலகில் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஆடம் கில்கிறிஸ்ட். அவருக்கு முன் ஆஸ்திரேலிய அணியின் நீண்ட கால விக்கெட் கீப்பராக இருந்தவர் இயன் ஹீலி.
இருந்தாலும் நான் ஹீலி ஸ்டைலை பின்பற்ற முயற்சி செய்ததில்லை. அதபோல் ரிஷப் பந்த் எம்எஸ் டோனியின் ஸ்டைலை பின்பற்ற முயற்சிக்கக் கூடாது என கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கில்கிறிஸ்ட் கூறுகையில் ‘‘இந்திய ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு என்னுடைய முதல் ஆலோசனை என்னவென்றால், எம்எஸ் டோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிடும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்பதுதான்.
டோனியை பற்றி அவர்கள் உருவாக்கிய பிம்பத்திற்கான அச்சு, அப்போதே சிதைக்கப்பட்டு விட்டது. எனவே, அந்த அச்சில் மீண்டும் ஒரு தயாரிப்பை உருவாக்க முடியாது.
என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து நான் சொல்வது, ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த விக்கெட் கீப்பரான இயன் ஹீலிக்குப் பிறகுதான் நான் வந்தேன். நான் ஹீலி ஸ்டைலை பின்பற்ற விரும்பியதில்லை. அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்பினேன். நான் கில்கிறிஸ்டாக இருக்க விரும்பினேன். இதுதான் ரிஷப் பந்த்துக்கு என்னுடைய அட்வைஸ்’’ என்றார்.