X

ரிஷப் பண்ட் தான் கேப்டன் – டெல்லி அணி நிர்வாகி அறிவிப்பு

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14-வது சீசன் ஐ.பி.எல். தொடர் தொடங்கப்பட்டது. மொத்தம் 60 போட்டிகளில் 29 போட்டிகள் விளையாடி முடிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல். தொடர் நிறுத்தப்பட்டது. தற்போது மீதமுள்ள 31 போட்டிகள் வரும் செப்டம்பர் 19-ம்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயமடைந்தார். இதனால், ஐ.பி.எல். தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. அவருக்கு பதிலாக இளம் வீரரான ரிஷாப் பண்ட் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கபபட்டார். டெல்லி அணியை சிறப்பாக வழி நடத்தி  எட்டு போட்டிகளில்  ஆறு வெற்றிகளை பெற்றுக் கொடுத்ததுடன் ரிஷாப் பண்ட் தனிப்பட்ட முறையிலும் சிறப்பாக விளையாடினார்.

இதையடுத்து, காயமடைந்த  ஷ்ரேயாஸ் ஐயர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து ஐ.பி.எல். போட்டியில் விளையாட தயாராகிவிட்டார். இதனால் டெல்லி அணியை யார் வழி நடத்தப்போவது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில்,  ரிஷாப் பண்ட்தான் கேப்டனாக தொடர்வார் என்று டெல்லி அணியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனால், கண்டிப்பாக ரிஷாப் பண்ட் கேப்டனாக செயல்படுவார் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.