ரிக்கி பாண்டிங்கிற்கு அதிர்ச்சியளித்த ஸ்மித் மற்றும் பான்கிராப்ட் பேட்டி

பாம் டேம்பரிங் விவகாரத்தில் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதமும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் தடை விதித்தது.

மூன்று பேரின் தடைக்காலம் 9 மாதங்கள் நிறைவந்து விட்டன. ரசிகர்கள் பால் டேம்பரிங் சம்பவத்தை ஓரளவிற்கு மறந்து விட்டனர். ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான தொடருக்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஸ்மித் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரின் பேட்டி பாக்ஸ் கிரிக்கெட் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நேரம் ரிக்கி பாண்டிங்கை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் “ஒரு முழுமையான பத்திரிகையின் அணுகுமுறையில் இருந்து, ஸ்மித் மற்றும் பான்கிராப்ட் ஆகியோரின் பேட்டி ஒளிபரப்பப்பட்டதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியும். இன்று ஏராளமான மக்கள் கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாளை அவர்கள் இதுகுறித்த செய்தியை படிப்பார்கள். என்ன நடக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்.

இது வீரர்கள் அல்லது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு எப்படி மகிழ்ச்சியாக இருக்கும் என்பது குறித்து எனக்கு உறுதியாக தெரியாது. இன்றைய பாக்சிங் டே டெஸ்ட் ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் சிறப்பான தருணம். ஆகவே, இந்த பேட்டி எப்படி எதிரொலிக்கப்போகிறது என்று பார்ப்போம்.

பேட்டியின் சில தலைப்புகளை பார்த்தேன். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. சில விஷயங்கள் எனக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. கேப் டவுனில் என்ன நடந்து என்பதை கடந்த 9 மாதங்களாக நாம் பெரிய அளவில் விவாதித்து விட்டோம். தற்போது இந்த செய்தி வெளிவந்துள்ளது. நாளைய செய்தி பேப்பரில் எப்படி எழுதப்போகிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools