Tamilசினிமா

ராம்கோபால் வர்மா அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பவன் கல்யாண் ரசிகர்கள்

ராம்கோபால் வர்மா சர்ச்சை கதைகளை படமாக்கி பிரபலமாக இருக்கிறார். சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை படம் எடுத்து வெளியிட்டார். என்.டி.ராமராவின் இரண்டாவது மனைவி வாழ்க்கையை மையமாக வைத்து லட்சுமி என்.டி.ஆர் படம் எடுத்தார். தற்போது நேக்கடு என்ற ஆபாச படத்தை இயக்கி இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை கேலி செய்யும் வகையில் பவர் ஸ்டார் என்ற படத்தை ராம்கோபால் வர்மா இயக்கி தயாரித்துள்ளார். இந்த படத்தில் பவன் கல்யாண் தோற்றத்தில் இருப்பவரை நடிக்க வைத்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில் பவன் கல்யாண் அரசியல் கட்சி தொடங்கி கடந்த தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததை விமர்சிக்கும் காட்சிகள் இருந்தன.

இதை பார்த்து பவன் கல்யாண் ரசிகர்கள் ஆவேசமானார்கள். ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ராம்கோபால் வர்மா அலுவலகத்தில் புகுந்து பொருட்களை அடித்து உடைத்து நொறுக்கினார்கள். போலீசார் விரைந்து வந்து 10 பேரை கைது செய்தனர். ரகளை நடந்தபோது ராம்கோபால் வர்மா அலுவலக மாடியில் இருந்ததால் தப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *