ராணுவ உடையில் கிரிக்கெட் பேட்டில் கையெழுத்து போடும் டோனி – வைரலாகும் புகைப்படம்

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். டோனி காஷ்மீரில் ராணுவப் பணியில் ஈடுபட்டுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து இருமாத காலம் ஓய்வு பெற்றுள்ள டோனி ராணுவத்தில் பணியாற்ற அனுமதி பெற்று அதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார்.

செவ்வாயன்று காஷ்மீரில் ராணுவப்படையில் சேர்ந்த அவர், ராணுவ சீருடையில் அவர் கிரிக்கெட் மட்டையில் கையெழுத்திடும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தெற்குக் காஷ்மீரில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ராணுவப் படையினருடன் டோனி பணியாற்றி வருகிறார். வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் வரை பணியாற்றுவார் என்று தெரிகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news