ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் டோனி பெயர்!

மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள கேலரியின் ஒரு பகுதிக்கு கவாஸ்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதனாத்தில் உள்ள ஒரு நுழைவாயிலுக்கு சேவாக் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. இவர் இந்தியாவுக்கு இரண்டு உலகக்கோப்பையை வாங்கிக் கொண்டுத்த ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவரது சொந்த மாநிலம் ஜார்க்கண்ட். இங்குள்ள ராஞ்சி மைதானத்தின் வடக்கு பெவிலியனுக்கு டோனியின் பெயர் சூட்ட ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இன்று இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியின்போது எம்எஸ் டோனி பெயர் சூட்டப்பட்டதை திறந்து வைக்க டோனியை அழைத்தது ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம்.

ஆனால், ‘‘இந்த மைதானத்தில் நான் அங்கமாக இருக்கிறேன். எனது வீட்டை நானே திறந்து வைப்பதா?’’ என தன்னடக்கத்துடன் கூறி மறுத்துவிட்டார். இதனால் ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கமே திறந்துள்ளது.

போட்டியின்போது வீரர்கள் டிரஸிங் அறையில் இருந்து பார்த்தால் எம்எஸ் டோனியின் பெயர் கம்பீரமாக காட்சியளிக்கும். ராஞ்சி மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools