ராஜ்ய சபா டிவி பார்ப்பவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை தொட்டது – வெங்கையா நாயுடு
பாராளுமன்ற மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ராஜ்ய சபா டி.வி. (ஆர்.எஸ்.டி.வி.) ஒளிபரப்பை ‘யூடியூப்’ வழியாக பார்த்தவர்களின் எண்ணிக்கை 4.5 லட்சமாக இருந்தது. இப்போது இந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 40 லட்சத்தை எட்டியுள்ளது. இது கடந்த 29 மாதங்களில் 888 சதவீத வளர்ச்சி ஆகும்.
இந்த வளர்ச்சியை பார்க்கும்போது இந்த தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு சரியான தகவலை அளிப்பதாகவும், பயிற்றுவிப்பதாகவும் உள்ளது என தெரிகிறது. இந்த சாதனைக்கு காரணமான அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.டி.வி. மாநிலங்களவையால் இயக்கப்படுகிறது. இதற்கிடையே லோக் சபா டி.வி. மற்றும் ராஜ்ய சபா டி.வி. ஆகியவற்றை இணைப்பதற்காக 6 பேர் குழுவையும் வெங்கையா நாயுடு நியமித்தார்.