ராஜேஸ்வரிக்கு விபத்து ஏற்பட்ட இடத்தில் கொடி கம்பம் இல்லை – தமிழக அரசு விளக்கம்
கோயம்புத்தூரில் ராஜேஸ்வரி என்ற இளம்பெண் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்து விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியின் வலது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வழக்கின் மீதான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயம்புத்தூரில் இளம்பெண் ராஜேஸ்வரிக்கு விபத்து நடந்த இடத்தில் கொடி கம்பம் ஏதும் இல்லை என்றார்.
மேலும், நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் பேனர் வைக்க யாருக்கும் அனுமதி வழங்குவதில்லை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து,வழக்கு விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டு உள்ளது.