ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு நாள் – நாளை நினைவிடத்தில் காங்கிரஸார் மலர் அஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33-வது ஆண்டு நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில நாளை காலை 7 மணிக்கு ராஜீவ்காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படுகிறது. பின்னர் ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிகளில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்ட மன்ற கட்சி தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். இதன் பிறகு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு தண்ணீர் பந்தலும் திறந்து வைக்கப்படுகிறது.
காலை 9 மணி அளவில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்படுகிறது. கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து யாத்திரையாக கொண்டு வரப்படும் ராஜீவ் நினைவு ஜோதியை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியும் நினைவேந்தல் உரையும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த தகவலை தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், ஊடக பொறுப்பாளருமான கோபண்ணா தெரிவித்துள்ளார்.