ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்ற வாகன விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் மதுராவில் இருந்து உத்தர பிரதேசம் மாநிலத்திற்கு ஏராளமானோர் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து ராஜஸ்தான் மாநிலம் பாரத்புர் மாவட்டத்தில் உள்ள லகான்புர் பகுதியில உள்ள அந்த்ரா பாலத்தில் நின்று கொண்டிருந்தது.
அப்போது கனரக வாகனம் (டிரெய்லர்) பேருந்தின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இதில் ஆறு பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்தனர். 15 பேர் காயத்துடன் உயிர் தப்பினர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் குஜராத் மாநிலம் பவ் நகரின் திஹோரில் இருந்து வந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.