ராஜஸ்தான் சாலை விபத்தில் 6 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பாபா ராம்தேவ் கோவில் பக்தர்கள் சென்ற டிராக்டர் டிரெய்லர் மீது வாகனம் ஒன்று மோதியதாக சுமேர்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமேஷ்வர் பாடி தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ராஜஸ்தான் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் பாலியில் நடந்த விபத்து வருத்தமளிக்கிறது. துயரமான இந்த நேரத்தில், என் எண்ணங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.