ராஜஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட 199 எம்.எல்.ஏ-களில் 158 பேர் கோடீஸ்வரர்கள்!
ராஜஸ்தான் மாநிலத்தில் 199 எம்.எல்.ஏ.க்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 158 பேர் கோடீசுவரர்கள். இதில் காங்கிரஸ் தலைவர்கள் ப்ரஸ்ராம் மோர்டியா ரூ.172 கோடியும், உதய்லால் அஞ்சனா ரூ.107 கோடியும், சுயேச்சை எம்.எல்.ஏ. ராம்கேஷ் மீனா ரூ.39 கோடியும் உள்ளதாக வருமான வரி கணக்கில் தெரிவித்துள்ளனர். கடந்த சட்டமன்றத்தில் 145 பேர் கோடீசுவரர்களாக இருந்தனர்.
59 எம்.எல்.ஏ.க்கள் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையும், 129 எம்.எல்.ஏ.க்கள் பட்டம் மற்றும் முதுநிலை பட்டமும் படித்துள்ளனர். 7 பேர் எழுத, படிக்க மட்டுமே தெரியும் என்று கூறியுள்ளனர். மொத்தம் 23 பெண் எம்.எல். ஏ.க்கள் உள்ளனர். 46 எம்.எல்.ஏ.க்கள் மீது குற்றவழக்குகள் உள்ளன. இவர்களில் 28 பேர் மீது தீவிரமான குற்றவழக்குகள் உள்ளன. பர்சாடிலால் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது கொலை வழக்கு உள்ளது.