ராஜஸ்தானில் சாலை விபத்து – 8 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள சதர் காவல் நிலையப் பகுதியில் பேருந்து ஒன்று பைக் மீது மோதியதில் அதில் வந்து கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் (70), அவரது மனைவி சாகுதேவி (65) உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

பிகானேர் நகரில் உள்ள கங்காஷாஹர் பகுதியில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில் டெம்போவும் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டெம்போவில் இருந்த சுந்தர்லால் புரா (58), அவரது மனைவி ராஜு தேவி (55) மற்றும் ஜான்வர்லால் புரா (70) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதேபோல் ஜுன்ஜுனுவின் சதார் காவல் நிலையப் பகுதியில் நடந்த மற்றொரு விபத்தில்,காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் ராஜ்குமார் (42) மற்றும் மந்தீப் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools