X

ராகுல் காந்தி பயணித்த விமானத்தில் கோளாறு – மீண்டும் டெல்லிக்கே வந்தது

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று பீகார் மாநிலம் சமஸ்திபூர், ஒடிசாவின் பலசோர் மற்றும் மகாராஷ்டிராவின் சங்கம்னர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்ய முடிவு செய்திருந்தார்.

இதற்காக அவர் இன்று காலை டெல்லியில் இருந்து பாட்னாவிற்கு விமானத்தில் புறப்பட்டார். அவருடன் கட்சியின் முக்கிய தலைவர்களும் சென்றனர். ஆனால், விமானத்தில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டதால், விமானம் மீண்டும் டெல்லிக்கே திரும்பி வந்துள்ளது.

இத்தகவலை ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சமஸ்திபூர், பலசோர் மற்றும் சங்கம்னர் பிரசாரம் பின்னர் நடைபெறும் என கூறியுள்ளார். சிரமத்திற்கு வருந்துவதாகவும் ராகுல் கூறியுள்ளார்.