அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சிகள் தான் பாஜக-வின் முக்கிய இலக்காக உள்ளது.
மத்திய அமைச்சரவையில் கிரிமின்னல் பின்னணி கொண்ட பாஜக தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால், எதிர்க்கட்சி தலைவர்கள் பேசியதற்காக தகுதிநீக்கம் செய்யப்படுகின்றனர்.
இன்று, நமது அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு புதிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.’ என மம்தா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.