X

ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா நாளை அமேதி, ரேபரலி தொகுதிகளில் பிரசாரம்

பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி தொடங்கி முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது. மே 19ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் போட்டியிடுகின்றனர்.

உபியின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் மே 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நாளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

ரேபரேலியில் சோனியாவை எதிர்த்து பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங்கும், அமேதியில் ராகுலை எதிர்த்து பாஜக சார்பில் ஸ்மிருதி இரானியும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.