Tamilசெய்திகள்

ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் – காங்கிரஸ் கட்சி அவசர ஆலோசனை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் இன்று மாலை 5 மணிக்கு அவசர ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

ராகுல் காந்தி விவகாரத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.