ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் பிரியங்கா காந்தி கலந்துக்கொள்கிறார்

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என தற்போது குஜராத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

நேற்றுடன் குஜராத் பயணம் முடிவடைந்த நிலையில், ராகுல் காந்தி நாளை மத்தியப் பிரதேசத்தில் தனது பாதயாத்திரையை தொடங்குகிறார். இந்நிலையில், ராகுல் காந்தி நாளை மத்திய பிரதேசத்தில் நுழையும்போது பாதயாத்திரையில் பிரியங்கா காந்தி வத்ரா இணைந்துக் கொள்வார் என்று கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி யாத்திரையில் கலந்துக் கொள்வது இதுவே முதல் முறை. இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், ” பிரியங்கா காந்தி யாத்திரையில் கலந்துகொண்டு தொடர்ந்து நான்கு நாட்கள் பங்கேற்பார்” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools